விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாக இருக்கும். பொருளாதார நிலை இன்று உயரும். கடன் சுமை குறைய புதிய யுக்திகளை கையாளும் நாளாகவும் இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது கொஞ்சம் அரிதாகத்தான் இருக்கும். திடீர் கோபம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சமாளித்து செல்லுங்கள்.
எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற கவலை மேலோங்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பெண்களுக்கு பெற்றோரின் ஆலோசனை முன்னேற்றத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மாணவர்களுக்கு இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாக இருக்கும். ஆனால் செய்யும் காரியங்களை மட்டும் கொஞ்சம் கவனமாக செய்வது சிறப்பு. குடும்பத்தாருடன் எந்தவிதமான பிரச்சினைகளும் வேண்டாம். கூடுமானவரை நீங்கள் அனுசரித்துச் செல்லுங்கள். அக்கம் பக்கத்தினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
உடல் நிலையைப் பொறுத்தவரை எப்போதும் போலவே சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். இருந்தாலும் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடையில் செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்