Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாலத்தில் அமர்ந்திருந்த நபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தேடுதல் வேட்டை தீவிரம்…!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது.இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில்  அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.  காளியப்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த டிரைவரான கந்தசாமி என்பவர்  ஆற்றின் பாலத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த போது  திடீரென நிலைதடுமாறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகந்தசாமியை  தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம்  குறித்து  வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை  மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories

Tech |