Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி ஒன்று கிடையவே கிடையாது… EPS வைத்த செக்….!!!!

சமீபத்தில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் கூறிய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து அதிமுகவில் சிலர் ஓ பன்னீர் செல்வத்தின் கருத்தை ஆதரித்தாலும், பல எம்எல்ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார் என்பதை அவருக்கு நினைவு படுத்துகிறேன் எனவும், சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் உடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஓபிஎஸ் தான் கூறினார் எனவும் அவர்  தெரிவித்திருந்தார்.

மேலும் அதிமுகவில் சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இன்றைக்கும் என்றைக்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சட்ட விதிகள் மாற்றப்பட்டு பொதுச் செயலாளர் என்ற பதவியை நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதை இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டு இரட்டை இலையை பயன்படுத்தி கொள்ள ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சசிகலாவை அதிமுகவில் எதுவும் செய்ய இயலாது என்று ஈபிஎஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது

Categories

Tech |