Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு ”வாக்குவாதம் உண்டாகும்” கெடுபிடிகளை சந்திப்பீர் …!!

மகரராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கில் திசை திருப்பம் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். கவனம் இருக்கட்டும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வாடிக்கையாளருடன் வாக்குவாதமும் ஏற்படக்கூடும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் தாமதம் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து செல்லும். கவனம் இருக்கட்டும். அரசால் இன்று ஆதாயமும் கிடைக்கும். சிலர் வீடு மாற்றக்கூடிய சூழல் இருக்கும். அதற்கு ஏற்றார் போல் நீங்கள் கவனமாக இருங்கள். மாணவ கண்மணிகளுக்கு இன்று கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். குடும்பத்தில் கலகலப்பும் ஒற்றுமையும் இருக்கும். சகோதரர் வழியில் உங்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும்.

இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கும். பயணங்கள் மேற்கொள்வதாக இருந்தால் மட்டும் கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். உங்கள் வாழ்க்கையை இன்று மாற்றக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை  அன்னதானமாக வழங்குங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய மாற்றங்களை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |