Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டியில் புதிய சாதனை படைத்த ஜஸ்பிரித் பும்ரா….! விவரம் இதோ ….!!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றி  ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார் .

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதின .இதில் முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 85 ரன்னில் சுருண்டது .இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 6.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 89  ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது .

இதனிடையே இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2 விக்கெட் கைப்பற்றினார் இதன் மூலம் இந்திய அணியின் சக வீரர் சஹாலின் சாதனையின் முடித்துள்ளார் .சர்வதேச டி20 தொடரில் இந்திய அணி தரப்பில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக யுஸ்வேந்திர சஹால் திகழ்ந்தார். இவர் 63 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார் .தற்போது பும்ரா  64 விக்கெட் கைப்பற்றி இவருடைய சாதனையை முறியடித்துள்ளார்.

Categories

Tech |