கொரோனாவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உத்தரகாண்ட் மாநில மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
கேதார்நாத்தில் உள்ள சிவாலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்ற மோடி பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, ஆதிகுரு சங்கராச்சாரியார் சிலைக்கு முன்பு இருந்த சமாதியில் அமர்ந்திருந்தபோது பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட உணர்வு இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருந்ததாக அவர் கூறினார். மேலும் கேதார்நாத் பகுதியில் 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்து இந்த பகுதி மீண்டும் மீட்கப்படுமா என்ற நிலை ஏற்பட்டதாகவும் ஆனால் அதை அவர் மீட்டு எடுத்ததாகவும் கூறினார்.
இந்த உன்னத முயற்சிக்கு துணை புரிந்த உத்தரகாண்ட் முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் எதிர்காலத்தில் பல முன்னேற்ற நடைமுறைகள் உத்தரகாண்டில் செய்யவிருப்பதாகவும் அவர் கூறினார். கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிகரித்துள்ளதாகவும் இதனைக் கொண்டு புதிய உச்சத்தை கேதார்நாத் அடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனாக்கு எதிரான போராட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஒழுக்கம் காட்டியதாகவும் புத்தகயா உள்ளிட்ட ஆன்மீக தலங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரத்து வருவதாகவும் மோடி கூறினார். தற்போது இந்தியா தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துள்ளதாகவும்,உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா ஒரு முக்கியமான இடத்தில் உள்ளதாகவும் கூறினார்.