டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டியில் அதிரடியாக விளையாடுவது அவசியமாகும் என ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார் .
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா – ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின . இதில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .குறிப்பாக இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார் .அதோடு அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இதன் பிறகு வெற்றி குறித்து ஜடேஜா கூறும்போது,” இந்த ஆடுகளத்தில் நான் பந்து வீசிய விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது .குறிப்பாக நான் எடுத்த முதல் விக்கெட் ஸ்பெஷலானது .
ஏனென்றால் இதுபோன்ற ஆடுகளங்களில் பந்து கொஞ்சம் டர்ன் ஆகி விக்கெட் விழுவது ஒரு பவுலராக மகிழ்ச்சியை தரும். இது போன்ற நல்ல கிரிக்கெட்டை நாங்கள் விளையாட விரும்புகிறோம் .அதோடு இந்தப் போட்டியில் பெரிய வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி . மீதம் ஒரு போட்டி எங்களுக்கு உள்ளது .இதேபோன்று நாங்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் எங்களை யாராலும் வீழ்த்த முடியாது அதோட டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவது அவசியமாகும் அந்த வகையில் இதேபோல் ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தினால் நிச்சயம் நாங்கள் வீழ்த்த முடியாத அணியாக திகழ்வோம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்