குளிப்பதற்காக சென்ற பெயிண்டர் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வாய்க்கால் அருகே அமர்ந்திருந்த சண்முகவேல் திடீரென தடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்துள்ளார். இதனைதொடர்ந்து தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் தத்தளித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சண்முகவேல் உடல் வாய்க்காலில் மிதப்பதைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் சண்முகவேலின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.