பலத்த மழையால் வீடுகள் இடிந்த குடும்பங்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல், ராசிபுரம், கூனவேலம்பட்டி புதூர், முத்துக்காளிப்பட்டி, குருக்கபுரம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும் மழை நீர் புகுந்துள்ளது. இதனையடுத்து ராசிபுரம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சவுந்தரம், இளங்கோ ஆகிய 2 பேருடைய வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு மழைநீர் வெளியேற்றுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மேலும் மழையால் பதித்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கிய நிலையில் வீடுகள் இடிந்த குடும்பத்தினருக்கு 4,000 ரூபாய், 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணெய், வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொருட்களையும் வழங்கியுள்ளார்.
அப்போது ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அதிகாரி தனபால், வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், ராசிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் ஜெகநாதன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ராஜேஷ் பாபு, முத்துகாளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலரும் உடன் இருந்துள்ளனர்.