Categories
தேசிய செய்திகள்

புனித நீர் தெளிச்சா போதும்…. காய்ச்சல் சரியாகிடும்…. சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் வசிப்பவர் அப்துல் சதார். இவருடைய மகளுக்கு கடந்த ஒருவாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. ஆனால் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் குஞ்சிப்பள்ளியில் உள்ள மசூதிக்கு அவருடைய பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இமாம் உவைஸ்ஸி என்பவர் சிறுமிக்கு புனித நீர் என்ற பெயரில் தண்ணீரை தெளித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேண்டாம். இரவுக்குள் சரியாகிவிடும் என தெரிவித்துள்ளார்.

இமாமின் பேச்சைக் கேட்டு மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலியே வைத்திருந்த நிலையில், சிறுமிக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவர, உறவினர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பாக அப்துல் சதாரின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்துல் மற்றும் இமாமை கைது செய்தனர். ஏற்கெனவே இதுபோல மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் தங்கள் குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அப்துல் சதாரின் சகோதரர் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |