தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பம் லண்டனில் வசிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தியை ரிலையன்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானி மும்பையில் உள்ள ஆண்டாலியாவில் வசித்து வருகிறார். மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடி குண்டு வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து முகேஷ் அம்பானி லண்டனில் வசிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் முகேஷ் அம்பானி மும்பையில் உள்ள ஸ்டோக் பார்க் பகுதியில் 300 ஏக்கர் நிலத்தை 592 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.
இந்த பகுதியில் 49 படுக்கை அறைகள் கொண்ட பிரம்மாண்ட வீடு கட்ட இருப்பதாகவும் அந்த வீட்டிலேயே இனி முகேஷ் அம்பானி வசிப்பார் எனவும் சில செய்திகள் பரவின. ஆனால் இதனை மறுத்துள்ள முகேஷ் அம்பானி ஸ்டோக் பார்க் பகுதியில் உள்ள இடத்தில் கோல்ப் மற்றும் விளையாட்டு விடுதி கட்டவே திட்டமிட்டிருப்பதாக முகேஷ் அம்பானி கூறினார். மேலும் லண்டனில் வசிக்க போவதாக கூறிய தகவல் அடிப்படையற்றது எனவும் இவ்வாறு சிலர் வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.