இரு சக்கர வாகனம் – கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நடையனேரி கிராமத்தில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் எரிச்சநத்தம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் துரைப்பாண்டியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் துரைப்பாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் துரைப்பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் துரைப்பாண்டிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துரைப்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.