Categories
அரசியல்

நடிகர் விஜய்க்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்… சீமான் கருத்து…!!!

நடிகர் சூர்யாவுக்கு இருக்கும் துணிவு கூட நடிகர் விஜய்க்கு இல்லை என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்கள்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதில் ஒரு கேள்விக்கான பதிலில் நடிகர் சூர்யாவை புகழ்ந்து பேசியுள்ளார். ஜெய்பீம் போன்ற படங்கள் தமிழில் வெளியாவது வரவேற்கத்தக்கது எனவும், இதனை துணிந்து சூர்யா செய்துள்ளார் எனவும் புகழ்ந்துள்ளார்.

மேலும் நடிகர் சூர்யாவுக்கு இருக்கும் துணிவு கூட நடிகர் விஜய்க்கு இல்லை என்று அதில் தெரிவித்துள்ளார். மேலும் சமூக அவலங்கள் குறித்து நடிகர்கள் துணிந்து பேச வேண்டுமென சீமான் தெரிவித்துள்ளார். விஜய் பேசவேண்டும், அவரின் உயரம் அவருக்கே தெரியவில்லை. அவர் ஆரம்பத்தில் பேசிவிட்டு பிறகு பின் வாங்குகிறார். முதலில் அச்சத்தை கைவிடுங்கள். இல்லை என்றால் லட்சியத்தை கைவிடுங்கள் என்பததைதான் விஜய்க்கு சொல்ல விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |