Categories
தேசிய செய்திகள்

நவ-13, 14, 15 ஆகிய தேதிகளில்…. ஏழுமலையான் பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் மாநிலங்கள் இடையே சுமுக உறவை ஏற்படுத்தும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் திருப்பதியில் உள்ள தனியார் ஓட்டலில் வரும் 14ஆம் தேதி தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும், யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். தென் மண்டல மாநாடு நடைபெற உள்ளதால், வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி சிறப்பு தரிசனத்தை ரத்து செய்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |