தமிழகத்தில் கொரோனா காரணமாக 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்களை கணக்கிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு காலதாமதமாக கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. தற்போது அதன் விடைத்தாள்கள் மதிப்பீடு பணிகள் முடிவடைந்த நிலையில், வருகின்ற 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.