கர்நாடக மாநிலத்தின் தட்சின கன்னடா மாவட்டம் குத்திகார் கிராமத்தில் உள்ள பாக்கு தோட்டத்தில் அடிக்கடி திருட்டு போயுள்ளது. எனவே அந்த இடத்தின் உரிமையாளர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களிடன் கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பாக்கு தோட்டத்தில் பாக்குகளை திருடியுள்ளார். இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் சேர்ந்து, அந்த சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல ஆர்வலர்கள் கொடுத்தப் புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தாக்குதல் நடத்திய 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.