Categories
தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேச எல்லையில் 100 வீடுகள்…. சீனாவின் திட்டம்தான் என்ன….? அமெரிக்கா வெளியிட்ட தகவல்….!!

அருணாச்சல பிரதேசத்தில் எல்லைத் தகராறு உள்ள அந்த பகுதியில் சீனா 100 வீடுகளைக் கொண்ட குடியிருப்பை கட்டியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு லடாக்கில் 2 நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு அதில் 20 இந்திய படையினரும், 4 சீன படையினரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்துக்கும் திபெத் தன்னாட்சி மண்டலத்துக்கும் இடையில் உள்ள பகுதிகள் யாருக்கு சொந்தமானது என்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தகராறு நீடித்து வருகின்றது.

இந்தநிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பாதுகாப்பு துறையினர் அளித்துள்ள ஆண்டறிக்கையில் அருணாச்சல பிரதேசத்தில் எல்லைத் தகராறு உள்ள பகுதியில் சீனா 100 வீடுகள் கொண்ட குடியிருப்பை கட்டியுள்ளதாக கூறியுள்ளது.

Categories

Tech |