தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தினர்.
உலக அளவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக ஒன்பது மாதகாலமாக அங்கு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து அங்கு வசிக்கும் 80% மக்களுக்கு இரு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு பின்பு தான் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்பொழுது உணவகங்கள், அரங்கங்கள், பணி புரியும் அலுவலகங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.