Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் இருந்தா…! வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும்…. இப்போ திமுக வேட்டு வச்சுட்டு …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் காரி துப்புகிறார்கள். இதே போல கேரள அமைச்சர் திறந்த போது இதே இடத்தில் நாங்கள் ஆட்சியில் இருந்து,  திமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்.ஆண்மை இல்லாதவர்கள், எதிர்த்து கேட்க முடியாதவர்கள் என்று வசை பாடியிருப்பார்கள், நீங்களே அதை போடுவீங்க. இப்ப நீங்க யாரவது போடுறீங்களா ? முதலமைச்சர் இது குறித்து கருத்து பேசி இருக்காரா ? சொல்ல மாட்டேங்குறீர்கள்.

தண்ணீரை திறந்து இருக்கிறேன் என்று சொல்கிறார், நான் கேட்கிறேன் முதலமைச்சர் தானே எல்லாத்துக்கும் அறிக்கை கொடுக்கிறார், நமது தமிழக முதலமைச்சர் ஒவ்வொரு அணையை திறப்பதற்கு அனுமதி கொடுக்கிறார். அப்போ நம்ம முதலமைச்சர் ஒரு அறிக்கை கொடுத்து இருப்பார்ல, இந்த மாதிரி மத்திய அரசு இன்றைக்கு வழிகாட்டுதல் கொடுத்திருக்கு…

அதனடிப்படையில் 142 அடியிலிருந்து இப்போ 139.5 அடி இருப்பதினால் நம் அதிகாரிகள் திறந்து விடுவார்கள், இல்லையென்றால் நம் அமைச்சர்கள் போய் திறக்க போறாங்க  அப்படியென்று அறிக்கை கொடுத்திருப்பாரா, கொடுத்திருக்க மாட்டாரா. இது சப்ப கட்டு கட்டுவதற்காக ஒரு தவறான தகவலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது கொடுப்பதன் மூலமாக இந்த அரசு, திமுக அரசு முல்லை பெரியாறு மட்டும் ஆபத்தை உருவாக்கவில்லை…

விஜய் சாகர் அணையில் இன்றைக்கு எத்தனை அடி உயர்த்தினால் தண்ணீர் திறக்கனும் என்று ஏற்கனவே வழிகாட்டுதல் கொடுத்திருக்கு, காவிரி மேலாண்மை கொடுத்துள்ளது, சுப்ரீம் கோர்ட் கொடுத்துள்ளது. அதற்கும் வேட்டு வைக்கின்ற மாதிரி ஐந்து மாவட்ட விவசாயிகள் மட்டுமல்ல, தஞ்சை விவசாயிகளுக்கும் நீர்வளத்துறை அமைச்சராக இருக்கக் கூடிய துரைமுருகன் வேட்டு வைக்கிறார். இந்த கருத்தை சொல்லி மக்களை திசை திருப்புகிறார். இதன் மூலமாக கர்நாடகா விழித்துக் கொண்டால் நமக்கு நாளைக்கு இதே மாதிரி ஒரு சூழ்நிலையில் காவிரி ஆற்று பிரச்சனையிலும் வரும். அதே மாதிரி கபினி அணையிலும் பிரச்சனைகள் வரும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |