Categories
கிரிக்கெட் விளையாட்டு

தவான் டக்… டெல்லிக்கு அதிர்ச்சியளித்த ஜே&கே!

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.

இந்தாண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ‘குரூப் இ’க்கான லீக் போட்டியில் ஜம்மு – காஷ்மீர் அணி, டெல்லி அணியை எதிர்கொண்டது.இதில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் ரன் எடுக்காமலே பெவிலியன் திரும்பி அதிர்ச்சியளித்தார்.

அதன்பின் நித்தீஷ் ராணா, அனுஜ் ராவத் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை சேர்த்தது. டெல்லி அணி சார்பில் நித்தீஷ் ராணா 55 ரன்களையும், ராவத் 34 ரன்களையும் எடுத்தனர்.

Image result for Syed Mushtaq Ali Cup

பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஜம்மு – காஷ்மீர் அணி தொடக்க வீரர்களின் அதிரடியால் 15.5 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 166 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மன்சூர் தார் 58 ரன்களை விளாசினார். இதன் மூலம் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை விழ்த்தி சாதனைப்படைத்துள்ளது.

மேலும் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஜம்மு – காஷ்மீர் அணி, டெல்லி அணியை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |