செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, 2024 ஆம் ஆண்டு துணை பிரதம மந்திரியாக நிற்பதற்கு ஸ்டாலின் கேரளாவின் உடைய கம்யூனிஸ்ட் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று வாய் வார்த்தையாக இந்த ட்ராமா நடக்கிறது. இல்லாத ஊருக்கு போற வழி தேடுகிறார். அப்போது அவர் துணை பிரதமராக நிற்பதற்கு கம்யூனிஸ்ட் எம்பிக்கள் சப்போர்ட் பண்ணுவார்கள் என்பதற்காகத்தான் இது நடக்கிறது என்று மேலோட்டமாக தெரிகிறது.
மாநிலத்தின் உடைய உரிமைகளை நம்முடைய மாநில அரசு முழுவதுமாக விட்டுக் கொடுத்திருக்கிறார். இந்த 5 மாவட்டத்தில் இத்தனை நாட்களாக நம் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்கள் அதனால் நம்மளுடைய முதலமைச்சர் அவர்கள் இது சம்பந்தமாக என்றும் பேசவில்லை. அவர் பேச வேண்டும். அவருக்கும் கேரளாவில் இருக்கின்ற கம்யூனிஸ்ட் அரசுக்கும் என்ன கள்ள உறவு நீடிக்கிறது. அதை அவர் வெளிப்படையாக கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.