தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வாழும் இஸ்லாமியர்களின் வசதிக்காக ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் தேவை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து ஒன்றிய சிறுபான்மை நல அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கணேசன் சு வெங்கடேசன் எம்பி எழுதியுள்ள கடிதத்தில் கொரோனா காரணமாக ஹச் புறப்பாடு மையங்கள் 21 -லிருந்து 10 ஆக கடந்த ஆண்டு குறைக்கப்பட்டது. 2022- லும் 10 மையங்களே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை டெல்லி, மும்பை கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூர், கௌகாத்தி, லக்னோ, திநகர், கொச்சி ஆகியவையாகும்.
இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் பயணிகள் கொச்சியில் போய் ஏற வேண்டும் என்கிற நிலைமை உள்ளதால் ஆயிரக்கணக்கான பேர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். ஆகவே புறப்பாடு மையங்கள் பற்றிய முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டுமெனவும், அதில் சென்னையை சேர்த்திட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.