Categories
தேசிய செய்திகள்

அடுப்புக்கு மாறும் மக்கள்…! ரிவர்ஸ் கியரில் மோடியின் வளர்ச்சி….! ராகுல் கிண்டல்

மோடியின் வளர்ச்சி வாகனம் ரிவர்ஸ் கியரில் போகிறது எனவும் லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்போது விறகு அடுப்பை பயன்படுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

சமையல் எரிவாயு விலை உயர்வை தொடர்ந்து உச்சத்தில் உள்ளதை சுட்டிக் காட்டிய ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். அதில் விலை உயர்வு காரணமாக கிராமப்புறங்களில் 42 விழுக்காடு மக்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு விறகு அடுப்புக்கு திரும்பி இருப்பதாக வெளியான செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்டை ராகுல் காந்தி தனது ட்விட்டரில் சேர் செய்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

வளர்ச்சி என்ற சொல்லிலிருந்து பல மைல்கள் தொலைவில் உள்ளோம். லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்போது விறகு அடுப்பை பயன்படுத்தும் கட்டாயத்தில் உள்ளனர். மோடியின் வளர்ச்சி வாகனம் ரிவர்ஸ் கியரில் உள்ளது. அதன் பிரேக்கு களும் செயலிழந்து விட்டன என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Categories

Tech |