ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த உணவு பார்சலில் பல்லி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிடங்கன் பாண்டலம் பகுதியில் சிவபாலன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஹோட்டலில் இருந்து சிவபாலன் எலுமிச்சை சாதம் 3 பார்சல் வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் பார்சல்களை பிரித்து அவரின் மகன் மற்றும் மகளும் சாப்பிடும் போது அதில் செத்த நிலையில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து மயங்கிக் கீழே விழுந்துள்ளனர்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தாசில்தார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் பார்சல் வாங்கிய ஹோட்டலுக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் உரிமையாளரிடம் தெரிவித்துவிட்டு எலுமிச்சை சாதத்தை கைப்பற்றி கீழே கொட்டியுள்ளனர்.