டெல்யை சேர்ந்த ஜுங்கு, சோனு மற்றும் தாமஸ், லோகேஷ் பகதூர் ஆகியோர் நடைபாதைகளில் தங்கி தினக்கூலியாக வேலைப் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தாமஸும், லோகேஷ் பகதூரும் ஜுங்குவிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.50 கடனாக பெற்றுள்ளனர்.
ஆனால் கடனை திருப்பி தராததால் ஜுங்கு கடனை திருப்பி கேட்டிருக்கிறார். அப்போது பொதுவெளியில் வைத்து ஜுங்குவை, தாமஸும், லோகேஷும் கிண்டல் செய்து அனுப்பியுள்ளனர். இதனை ஜுங்கு சோனுவிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் தாமஸையும் பகதூரையும் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினர்.
அதன்படிசம்பவத்தன்று நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த இருவரின் கழுத்தையும் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் கத்திக்குத்துக்கு ஆளானவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இரண்டே மணி நேரத்தில் ஜுங்கு மற்றும் சோனுவை கைது செய்துள்ளனர்.