Categories
தேசிய செய்திகள்

இதை செய்யாவிட்டால் நடவடிக்கை பாயும்…. போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை….!!!

கேரள மாநிலத்தில் கடந்த 9 வருடங்களாக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படாமல் இருந்த நிலையில் சம்பள உயர்வு தொடர்பாக போக்குவரத்துத்துறை மந்திரியுடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

முதல்நாள் போராட்டத்தில் நீண்டதூர பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் கேரளா பயணிகள் மட்டுமில்லாமல் தமிழகத்தை சேர்ந்த பயணிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இதனையடுத்து போராட்டத்தை அறிவித்து பணிக்கு வராத போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் துறை மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |