விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. அதில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி பகுதியில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 6000 கோடி பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது.
அதன்படி நடப்பாண்டு 60% பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. ரூ.4,200 கோடி அளவில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளது.பொதுவாக 6 ஆயிரம் கோடிக்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசு, சென்ற ஆண்டு கொரோனா காரணமாக விற்கப்படாத காரணத்தால், இந்த ஆண்டு 60 சதவீதம் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விற்பனை 30 சதவீதம் குறைந்துள்ளது.