கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
கடலூர் மாவட்டத்தில் தென்னம்பாக்கம் காலனியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் கூலி தொழிலாளியாக பணி புரிகிறார். இவரது மனைவி அம்பிகா. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் இவரது வீட்டின் சுவர் நனைந்திருந்தது. அந்த சுவர் திடீரென இடிந்து தூங்கிக் கொண்டிருந்த சங்கர் மீதி விழுந்தது. இவர் சத்தம் கேட்டு எழுந்து வந்த மனைவி அம்பிகா சங்கர் சிக்கி இருப்பதை கண்டு கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.
இதுபற்றிய தகவலை தீயணைப்பு நிலையத்திற்கு கூறினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றினார். ஆனால் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். அதனைத் தொடர்ந்து தூக்கணாம்பாக்கம் போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடலூர் தாசில்தார் பலராமன் வருவாய், வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர்கள் இடிந்து விழுந்த சுவரை நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.