தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் காலத்தில் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை,வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த எண்களில் மக்கள் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளது
1913
04425619206
04425619207
04425619208
● 9445477205 எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாக புகார்களை தெரிவிக்கலாம்.