விரைவில் அனைவரையும் நேரில் வந்து சந்திக்க உள்ளதாக சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது “என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்னிடம் மலர் கொத்து மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்குவது தயவுசெய்து தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு எனக்கு ஏதேனும் செய்ய விரும்பினால் அதனை தாங்கள் வாழ்கின்ற இடத்திற்கு அருகில் உள்ள ஏழை எளியவர்கள் ஆதரவற்றவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தும், தற்போது கொரோனா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தால் அது எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக இருக்கும். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் அனைவரது ஒற்றுமையையும் ஒப்பற்ற அன்பு மட்டுமே எனக்கு வேண்டும். உங்களை எல்லாம் தாங்கள் வாழும் இடத்திற்கு நேரில் வந்து சந்திக்க விழைகிறேன். விரைவில் சந்திப்போம்.” என்று அதில் தெரிவித்திருந்தார்.