Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி… தமிழகத்தில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறி பயிர் இடுவது தொடங்கி விளைச்சல் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன காய்கறி வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக காய்கறி விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அவ்வகையில் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 80 ரூபாய் வரை விற்பனை ஆன முருங்கை 120 ரூபாய்க்கும், பீன்ஸ் மற்றும் அவரை விலை தலா 20 அதிகரித்து 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதனைப் போலவே அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.மழை நீடிக்கும் பட்சத்தில் இனிவரும் நாட்களில் காய்கறி விலை மேலும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீன்ஸ்-ரூ.50, அவரை-ரூ.50, பாகற்காய் (பன்னீர்)-ரூ.45, பாகற்காய் (பெரியது)-ரூ.40, கத்தரி-ரூ.40, வெண்டை-ரூ.35 முதல் ரூ.45 வரை, புடலங்காய்-ரூ.30, கோவைக்காய்-ரூ.25 முதல் ரூ.40 வரை, சுரைக்காய்-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.40 முதல் ரூ.45 வரை, பச்சை மிளகாய்-ரூ.40, பீட்ரூட்-ரூ.35, கேரட் (ஊட்டி)-ரூ.60, கேரட் (மாலூர்)-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, முட்டைக்கோஸ்-ரூ.20, இஞ்சி-ரூ.80, சாம்பார் வெங்காயம்-ரூ.75 வரை, பல்லாரி வெங்காயம் (நாசிக்)-ரூ.40 முதல் ரூ.50 வரை, பல்லாரி (ஆந்திரா) -ரூ.35 முதல் ரூ.40 வரை, தக்காளி-ரூ.60 முதல் ரூ.70 வரை, சேனைக்கிழங்கு-ரூ.30, சேப்பங்கிழங்கு-ரூ.35, காலிபிளவர் (ஒன்று)-ரூ.40, முருங்கை-ரூ.120, உருளைக்கிழங்கு-ரூ.35.

Categories

Tech |