அதிவேக ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் அண்மைக்காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு பயங்கரவாத அமைப்பினர் அங்கு அதிகமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் உள்ள Warburg நகரில் கத்திக்குத்து சம்பவம் நடந்தது. அதனை சோமாலிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் நடத்தியுள்ளார். இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது ஐரோப்பா கண்டம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள பவாரியா நகரில் சென்றுக்கொண்டிருந்த அதிவேக ரயிலில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் கத்திக்குத்து நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
இருப்பினும் அவர் கத்திக்குத்து நடத்தியதற்கான பின்னணி மற்றும் நோக்கம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அதிவேக ரயிலானது செயுபெர்ஸ்டோர்ப் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு அதிகமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.