Categories
மாநில செய்திகள்

பெண்களே…. மகப்பேறு நிதியுதவி கிடைப்பதில் தாமதமா?…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழக அரசின் மகப்பேறு நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் 104 சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ நாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்காக ஆண்டுக்கு 950 கோடி ரூபாயை அரசு வழங்கி வருகிறது. அதில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் பயனடைகின்றனர். நிதி உதவி பெற முடியாதவர்கள்,அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் directorate of public health & preventive medicine என்ற ட்விட்டர் பக்கத்தில் மாவட்ட வாரியான அதிகாரிகளின் மொபைல் போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த எண்களில் தொடர்பு கொண்டும் தீர்வு காணலாம். மேலும் 104 க்கு போன் செய்து வழிகாட்டுதல்கள் பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே மகப்பேறு நிதி உதவி வருவதில் சிக்கல் உள்ள பெண்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |