பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா மீண்டும் விஜய் டிவி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து, இந்த சீரியலில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் இறந்து விட்டதாக ஒளிபரப்பு செய்தனர்.
இது பல ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவர் மீண்டும் விஜய் டிவி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி, இவர் ”பாக்கியலட்சுமி” சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இவரின் ரசிகர்கள் லட்சுமி அம்மாவை புதிய ரோலில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கின்றனர்.