Categories
தேசிய செய்திகள்

உணவு தானியங்கள் வழங்குவதை…. 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்…. அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

கொரோனா முதல் அலையின்போது மக்களுடைய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக இலவச உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு 5 கிலோகிராம் உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன. இந்தத் திட்டமானது ஜூலை முதல் நவம்பர் வரை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது அலை தொடங்கியதால் மே முதல் ஜூன் வரை இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால் இந்த திட்டமானது வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்கு பின்னர் செயல்படுத்தப்படாது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த திட்டத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக வேலையின்மை அதிகரித்திருப்பதால் ஏழை மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் அவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |