Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு விண்வெளி ரகசியங்கள்…. திருட திட்டமிட்ட சீன உளவாளி…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

அமெரிக்க விண்வெளி ரகசியங்களை திருட திட்டமிட்ட சீன உளவாளியை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சீன அரசின் உளவுத்துறை அதிகாரியான Xu Yanjun என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐரோப்பா நாட்டின் பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர், இவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். மேலும், இவர் அமெரிக்க இராணுவ நிறுவனங்களின் ரகசியங்களை திருட சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த வழக்கை அமெரிக்க கோர்ட்டு விசாரித்து, அவரை குற்றவாளி என்றும் தீர்ப்பு வழங்கியது. அதுமட்டுமின்றி, அவருக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 5 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

மேலும், பல அமெரிக்க விமான போக்குவரத்து மற்றும் விண்வெளி நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்களை திருட சதி செய்ததாக சீன அரசு பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவாளி, மத்திய நடுவர் மன்றத்தால் தண்டிக்கப்பட்டார் என்று நீதித்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Categories

Tech |