Categories
சினிமா தமிழ் சினிமா

யாரும் கவலைப்படாதீங்க… சொன்னபடி ‘ஹீரோ’ கண்டிப்பா வரும்..!!

ஹீரோ படம் திட்டமிட்டப்படி டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு உறுதி தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ளது ‘ஹீரோ’ திரைப்படம். இப்படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிட 24 ஃபிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. சிவகார்த்திகேயன் – ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

மேலும், ‘இரும்புத்திரை’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இவர்களுடன் நாச்சியார் படத்தில் நடித்த இவானா, பாலிவுட் நடிகர் அபய் தியோல், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை டிசம்பர் 20 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படம் 20ஆம் தேதி வெளியாகாது என தகவல் வெளியானது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹீரோ பட தயாரிப்புக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில், டிவி, ரேடியோ, நியூஸ் சேனல் என எங்க திரும்பினாலும் நம்ம நியூஸ்தான். இலவசமாக படத்தை புரமோஷன் செய்யும் அனைவருக்கும் நன்றி. நமக்கு ரசிகர்கள் எல்லா பக்கமும் இருக்காங்க போல. ரசிகர்களுக்கு ஒரு செய்தி, யாரும் கவலைப்படாதீங்க படம் கண்டிப்பாக டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |