Categories
மாநில செய்திகள்

மாணவியர்களே ரெடியா…. ராணுவ கல்லூரியில் அட்மிசன்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் இந்திய தேசிய ராணுவ கல்லூரி ஒன்று உள்ளது. இதில் 11 வயது முதல் 13 வயது வரை உள்ள மாணவர்கள் மட்டுமே சேர முடியும். இந்த ராணுவ கல்லூரியில் நுழைவுத் தேர்வு மற்றும் கல்லூரியில் மாணவியர் சேர அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இதை எதிர்த்து ஒரு மாணவி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, அடுத்த ஆண்டு தேசிய ராணுவ கல்லூரியில் சேர்பவர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நுழைவுத்தேர்வுக்கு நடக்கும் என்றும் அதில் மாணவியர் பங்கேற்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து இதற்கான விண்ணப்பத்தை வருகின்ற 15ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ராணுவ கல்லூரியில் விண்ணப்பங்களை பெறும் நிறுவனமாக அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மற்றும் டிஎன்பிசி செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் ராணுவ கல்லூரியில்  சேருவதற்கான நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதில் தேர்வு எழுத விரும்புபவர்கள் 2009 ஜூலை 2 முதல் 2011 ஜனவரி 1க்கும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் தமிழக மாணவர்களுக்கு சென்னையில் மையம் அமைக்கப்படும். இந்த தேர்வில் ஆங்கிலம்,கணிதம் மற்றும் பொது அறிவு குறித்து தேர்வுகள் நடத்தப்படும்.

அதைத்தொடர்ந்து இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் தபால் வழியே விண்ணப்பிக்கலாம். அதற்கான கையேட்டை ராணுவ கல்லூரியில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் ராணுவ கல்லூரியின்  www.rimc.gov.in என்ற இணையதளத்தின் விண்ணப்பக் கட்டணமாக 600 செலுத்தப்பட வேண்டும். தமிழக மாணவ மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப நகலுடன் நவம்பர் 15 க்குள் அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தை அணுக வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |