Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராகுல் டிராவிட் மீதான குற்றச்சாட்டு நிராகரிப்பு ….!!

 இரட்டை பதவி விவகாரத்தில் ராகுல் டிராவிட் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டதாக பிசிசிஐ ஒழுங்குமுறை அலுவலர் டி.கே. ஜெயின் (ஓய்வு) தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கடந்த சில மாதங்களுக்கு முன் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சய் குப்தா, டிராவிட்டிற்கு இந்த புதிய பதவி வழங்கியதில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக பிசிசிஐ ஒழுங்குமுறை அலுவலரிடம் புகார் அளித்தார்.

ஏனெனில் டிராவிட் இந்தியா சிமெண்ட்ஸ் குழுவின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துவருகிறார். இதில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தியா சிமெண்ட்ஸ் குழுவிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிசிசிஐ விதிகளை மீறி ராகுல் டிராவிட்டிற்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

Image result for ராகுல் டிராவிட்

இதைத்தொடர்ந்து பிசிசிஐ ஒழுங்குமுறை அலுவலர் டிகே ஜெயின் ராகுல் டிராவிட்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த டிராவிட், தான் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து விடுப்பில் இருப்பதாகவும் தனக்கும் சென்னை அணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது ராகுல் டிராவிட் மீதான குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய பிசிசிஐ ஒழுங்குமுறை அலுவலர் டி.கே. ஜெயின், ராகுல் டிராவிட் மீதான இரட்டை பதவி விவகார புகார் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டில் டிராவிட் மீது எந்தவொரு பிரச்னையும் இல்லை என்பது தெரிகிறது. இதனால் அவர் மீதான குற்றச்சாட்டை நிகாரிப்பதாக அவர் தெரிவித்தார்

Categories

Tech |