தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக சென்னையில் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பெரம்பூர், ஓட்டேரி பகுதியில் முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.