Categories
தேசிய செய்திகள்

மக்களே…! மிக நீண்ட நேர சந்திரகிரகணம்…. எப்போது நடக்குது தெரியுமா…???

வரும் 19ம் தேதி இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் நடக்க உள்ளது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சந்திரனின் மீது பூமியின் நிழலானது படிந்து, அதை மறைக்கும். இந்நிலையில், இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் வரும் 18ம் தேதி இரவு தொடங்கி, 19ம் தேதி வரையில் நடக்க உள்ளது.

இந்திய நேரப்படி நண்பகல் 1.30க்கு இந்த கிரகணத்தின் உச்சம் ஏற்பட உள்ளது. அப்போது, பூமியானது சந்திரனின் 97% பகுதியை மறைக்கும். இதனால், சந்திரன் சிவப்பு நிறத்தில் காணப்படும். இந்த கிரகணம் 3 மணி நேரம், 28 நிமிடங்கள் நீடிக்கும் என்று நாசா கணித்துள்ளது. 2001ம் ஆண்டு முதல் 2100ம் ஆண்டு வரையிலான நூற்றாண்டில், இதை விட வேறு எந்த சந்திர கிரகணமும் இவ்வளவு நீண்ட நேரத்துக்கு இருக்காது என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |