Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சேரும் சகதியுமாக இருக்கு…. கிராம மக்களின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

சாலை வசதி இல்லாததால் விரக்தியடைந்த மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மொசகுளம் கிராமத்தில் கடந்த 30 வருட காலமாக சாலை வசதி செய்து தரப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக மழை காலங்களில் சாலை போக்குவரத்து பயனற்ற நிலையில் ரோட்டில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாகத்தான் விவசாயிகள் விளை நிலங்களுக்கு போகவும், இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு தூக்கி செல்ல வேண்டியதும் இருக்கின்றது.

இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இந்த சாலை மிகவும் சேதமடைந்து சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விரக்தியடைந்த மொசகுளம் கிராம மக்கள் சேதமடைந்து காணப்படும் சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |