Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை அனுஷ்காவின் அடுத்த பட அறிவிப்பு… ஹாட்ரிக் கூட்டணி…!!!

நடிகை அனுஷ்கா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் அனைத்து டாப் நடிகர்களுடனும் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கடைசியாக இவர் மாதவனுடன் இணைந்து நடித்த நிசப்தம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்று நடிகை அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 48-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை மகேஷ் பாபு.P இயக்க இருக்கிறார்.

மேலும் பிரபல தெலுங்கு நிறுவனமான யூவி கிரேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏற்கனவே அனுஷ்கா நடிப்பில் வெளியான மிர்ச்சி மற்றும் பாகமதி ஆகிய ஹிட் படங்களை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது மூன்றாவது முறையாக இந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அனுஷ்கா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |