Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” உங்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கிறது…. சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியில் தகவல்….!!

கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது பாதுகாப்பானது என்று சுவிட்சர்லாந்து நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றை எதிர்த்து இந்தியா உட்பட பல நாடுகளில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது அது அவர்களது கருவுக்கும், நஞ்சுக்கொடிக்கும் மிகுந்த பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் கர்ப்பகால ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாப்பை அதிகரிக்கிறது என்று சுவிட்சர்லாந்து நாட்டு வைராலஜி மற்றும் நோய் எதிர்ப்பியல் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியபோது “கர்ப்பிணி பெண்கள் அதே வயது கொண்ட மற்றவர்களை காட்டிலும் கொரோனா தொற்று பரவுவதற்கு 70 சதவீதம் கூடுதல் வாய்ப்பு இருக்கின்றது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு கடுமையான பாதிப்பு அபாயமும் 10 சதவீதம் அதிகம்” என அவர்கள் தெரிவித்தனர். ஆகவே கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்கிறபோது அது அவர்களுக்கு பாதுகாப்பினை தருகிறது.

Categories

Tech |