.செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடைய தம்பி ராஜாவை நானே மேடையில் தான் பார்த்தேன், அவர்கள் எல்லாம் பழைய பழக்கம், என்னுடைய சம்மந்தி திரு வாண்டையார் அவருக்கு நல்ல நண்பர், அவர் பத்திரிக்கை கொடுத்து இருக்கிறார், அதனால் வந்திருக்கிறாரு. சின்னம்மா பொதுச்செயலாளர் என்று சொல்கிறார்களே என்று சொன்னதற்கு, அவுங்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அப்படி என்று சொல்கிறார்களே தவிர….
ஒரு சமயம் ஆட்சி அதிகாரம் கொடுத்தவர்களை பற்றி சொல்வதற்கே… ஒரு தாய் ஸ்தானத்தில் உள்ளவர்களை பார்த்து பேசுகிறார்கள் என்றால்… யாரு என அதை தான் சொல்ல வேண்டிய நிலைமை இருக்கு, யாரு நாலு காலுல மாதிரி தவழ்ந்து போனது. நாய் கூட நன்றி உள்ளது, அதை கூட சொல்ல கூடாது. நாலு காலுல தவழ்ந்து போனது யாரு ? அன்றைக்கு காலில் விழுந்து வணங்க வேண்டிய காரணம் என்ன ? என்று நான் கேட்கிறேன்.
அன்னையிலிருந்து இதை தானே கேட்கிறேன். அதனால் பழனிச்சாமி முதலமைச்சர் ஆக இருந்ததனால் உங்களுக்கெல்லாம் பெரிய மனிதராக தெரிகிறார் என்று தான் நான் பார்க்கிறேன். எனக்கு அம்மாவை 1983ல் இருந்து தெரியும். எங்க சித்தி அங்கேயே இருப்பாங்க. நானும் அடிக்கடி அங்க போய் இருக்கேன். 1988ல் இருந்து 2011 வரைக்கும் அங்கேதான் இருந்திருக்கிறேன்.
எனக்கு தெரிந்து அந்த மாதிரி அம்மாவுக்கு குழந்தை கிடையாது, அம்மா எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்லக் கூடியவர்கள். அதனால் அவர்களுக்கு குழந்தை எல்லாம் கிடையாது. அதான் சொல்கிறேனே இந்த மாதிரி போய் பிரச்சாரம் அம்மாவுடைய மறைவுக்கு ஒரு காரணம் சொல்கிற மாதிரி…. இதுவும் ஒரு பொய்யான தகவல், பிரபலமா இருப்பவர்கள் மீது சொல்லக்கூடிய போய் பிரச்சாரம் அவ்வளவு தான் என தெரிவித்தார்.