Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட மசோதா…. நன்றி தெரிவித்த சபாநாயகர்…. அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா அதிபர்….!!

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் விரிவுப்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அதனை விரிவாக்கம் செய்யவும் சுமார் 75 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவானது நாடாளுமன்ற கீழ் சபையில் நிலுவையில் இருந்தது. இந்த மசோதாவானது பல உள் விவாதங்கள் மற்றும் ஜனநாயக கட்சி எம்.பிக்கள் இடையே லேசான சச்சரவுகளுக்கு மத்தியிலும் நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்ற கீழ்  சபையில் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து 228 பேரும் எதிராக 206 பேரும் வாக்களித்துள்ளனர்.

குறிப்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் எதிரிப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சியின் உறுப்பினர்கள் 13 பேர் ஆதரவளித்துள்ளனர். மேலும் வாக்கெடுப்பில் பெரும்பாலானோர் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டதால் வெற்றிகரமாக கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதமே மேல் சபையில் மசோதாவானது நிறைவேற்றப்பட்டது. தற்போது இரு சபைகளின் நிறைவேற்றுதலுக்கு பிறகு அமெரிக்கா அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவானது அமெரிக்கா அதிபர் செயல்பாடுகளில் முக்கிய பங்கு பெறுகிறது. மேலும் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு சபாநாயகர்  நான்சி பெலோசியை அமெரிக்கா அதிபர்  ஜோ பைடன் நள்ளிரவில் தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த மசோதாவினை நிறைவேற்றுவதற்கு துணையாக இருந்த அமெரிக்கா அதிபருக்கு சபாநாயகர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இது குறித்து அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நாம் அனைவரும் ஒரு தேசமாக இணைந்து முன்னேற்றப் பாதைக்கு காலடி வைத்துள்ளோம். இனி வரும் தலைமுறையினர் நம்மை திரும்பி பார்ப்பார்கள். மேலும் 21ஆம் நூற்றாண்டுக்கான பொருளாதார போட்டியில் அமெரிக்கா வெற்றியடைந்ததும் அனைவரும் இதனை நினைத்துக் கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |