பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். கடைசியாக இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபிசந்த் மாலினேனி இந்த படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கனவே கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் வெளியான க்ராக் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.