மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஜெயலலிதா மரணம் குறித்து பொய் பிரச்சாரத்தை கிளப்பிவிட்டது திமுக தான் எனவும் குற்றம் சாட்டினார். மேலும் ஓபிஎஸ் எதையும் சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவர், ஆனால் எடப்பாடி பழனிசாமி தற்போது அரசியல் ரீதியாக பலவீனமாக இருக்கிறார்.
அவரை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் சசிகலா சட்டரீதியாக அதிமுகவை மீட்க போராடுகிறார். நான் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வென்று அதிமுகவை மீட்டெடுக்க போராடுகிறென். பாதை வெவ்வேறாக இருந்தாலும் இலக்கு ஒன்று தான்” என்று தெரிவித்தார்.