அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு துறைரீதியான ஞானம் இல்லை என்று ஹச். ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 10 ரூபாய் குறைந்துள்ளது. மேலும் மத்திய அரசு தனது காலால் வரியை குறைத்துள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறி ஆட்சியை பிடித்த அரசு இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் கோவில் அபகரிப்பில் திமுக அரசு ஈடுபட்டு வருகின்றது.
அறநிலையத்துறை சட்டம் 1953இன் படி செயல்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து வருகிறார். இவ்வாறு கூறிக் கொண்டு பல கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது. தனது துறை ரீதியாக எந்த ஞானமும் இல்லாதவராக அறநிலை துறை அமைச்சர் இருகின்றார். கோவில்களை அறநிலைத்துறை அரசு எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால் பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.