டெல்லியில் நடைபெற்று வரும் பாஜக செயற்குழு கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மட்டும் நேரில் வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பஞ்சாப்பை தவிர பிற மாநிலங்களில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகின்றது. எனவே அந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கவும், பஞ்சாபில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே கட்சி தலைமை தொடங்கியுள்ளது. அதேநேரம் கட்சியின் தேசிய தலைமைக்கும் இந்த மாநில தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இதற்காக அந்தந்த மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றது. இந்த கூட்டத்தில் பல மாநில தலைவர்கள் காணொளி மூலமாக கலந்து கொள்ள உத்தரவிட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மட்டும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் செயல்பாட்டுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் அண்ணாமலை மட்டும் டெல்லிக்கு அழைக்கப்படுவது முக்கியத்துவம் பெறுகின்றது.